சாலையில் பறந்த கார்! அதிமுக பிரமுகர்கள் உயிரிழப்பு!

Photo of author

By Parthipan K

சாலையில் பறந்த கார்! அதிமுக பிரமுகர்கள் உயிரிழப்பு!

Parthipan K

The car flew on the road! AIADMK officials killed!

சாலையில் பறந்த கார்! அதிமுக பிரமுகர்கள் உயிரிழப்பு!

சென்னை கும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் பாபு மற்றும் சுரேஷ் பாபு.இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. இவர்களுக்கு சொந்தமான ஜேசிபி மற்றும் பொக்லைன் எந்திரம் உள்ளது.அந்த வாகனங்கள் பழுதானது.அதனால் அவர்கள் அவர்களுடைய சொந்த ஊரில் இருந்து மெக்கானிக்கை அழைத்து வந்தனர்.அதன் பிறகு வாகனத்தை சரி செய்யப்பட்டது.அதனையடுத்து அவரை அழைத்து சென்று ஊரில் விட்டுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் ஐந்து  பேர் வந்துள்ளனர். அந்நேரத்தில் கார் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மலையம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ரமேஷ் பாபு மற்றும் சுரேஷ் பாபு, சுதாகர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்து எதிர்பாராதவிதமாக நடைபெற்றதா இல்லை யாரேனும் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.