ஜல்லிக்கட்டு எதிரான வழக்கு! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்!
உச்சநீதி மன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பீட்டா அமைப்பு சார்பில் வழக்கறிஞர் சியாம் திவான் ஆஜர் ஆகி வாதாடினார்.
அப்போது அவர் பாரம்பரிய காளை இனங்களை காப்பாற்றுவதற்கும், அவற்றை பாதுகாப்பதற்கும் தான் ஜல்லிக்கட்டு என்பது நடத்தப்படுகிறது என கூறி வருகின்றனர்.அதனை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது.
ஜல்லிக்கட்டு என்பது காளைகளை கொடுமை செய்யும் விளையாட்டாக உள்ளது என்றார்.இந்த நீதிமன்றம் முன்னர் ஜல்லிக்கட்டில் இருக்கும் நடைமுறைகள் தான் கொடுமை என கூறியது.மேலும் தற்போது ஜல்லிக்கட்டுக்கென சட்டம் உள்ளது.
உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.தற்போது மனுதாரர் தரப்பு இது விதிமுறைகளை முறையாக கட்டாயம் அமல்படுத்துவதில் ஏற்பட்ட தவறு மட்டுமே.
மேலும் ஜல்லிக்கட்டு காளைகள் என்பது திடீரென இந்த விளையாட்டில் பயன்படுத்துவதில்லை என கூறப்பட்டது அப்போது தலைமை நீதிபதிகள் கூறுகையில் காளைகளை குடும்ப உறுப்பினராகவே பார்க்கின்றனர் எனவும் கூறினார்கள்.
பீட்டா அமைப்பு சார்பில் வாதாடிய வக்கீல் முன்னதாகவே இந்த நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் ஒரு பழக்கத்தை காட்டுமிராண்டித்தனம் என கூறியதால் அதனை மீண்டும் இந்த நீதிமன்றம் மாற்றி அமைக்க கூடாது என விவாதம் செய்தனர்.