ஜல்லிக்கட்டு எதிரான வழக்கு! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு?

0
185
The case against Jallikattu! Supreme Court order?
The case against Jallikattu! Supreme Court order?

ஜல்லிக்கட்டு எதிரான வழக்கு! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு?

தமிழ்நாடு விலங்குகள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.அரசமைப்புச்சட்டத்தின் விளக்கம் தொடர்பான கேள்விகளை உள்ளடக்கியிருப்பதால் அரசியல் சாசன அமர்வு மூலம் இந்த விவகாரம் முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் முன்னராக கூறியிருந்தது.

தமிழகத்தில் காளைகளை அடக்கும் பாரம்பரிய விளையாட்டை அனுமதித்து மாநில சட்டத்தை எதிர்த்து விலங்குகள் நல அமைப்பான பீட்டா உள்பட பல்வேறு அமைப்புகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்விற்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உத்தரவிட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்கள் தொடர்பாக ஆய்வு செய்யும் தேவை இருப்பதாக கூறி ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். அந்த உத்தரவின் பேரில் நேற்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள்  5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டத் திருத்தங்கள் அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானது என இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டது.அப்போது அவர்கள் இந்த வழக்கை நவம்பரில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறினார்கள்.இதனைதொடர்ந்து இந்த வழக்கு நவம்பர் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Previous articleசெந்தில் பாலாஜியை சுற்றி வளைக்கும் அமலாக்கத்துறை! காப்பாற்ற முயற்சிக்கும் தமிழக அரசு!
Next articleமாணவிகள் அறைக்கு சென்றதும் கதவுகள் மூடப்பட்டுவிடும்: ஆசிரியையின் கடைசி ஆடியோ!