குப்பை லாரி இந்த நேரத்தில் தான் இயக்க வேண்டும் என்ற வழக்கு! உயர் நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு!

0
155
The case that the garbage truck should be operated at this time! Order issued by the High Court!
The case that the garbage truck should be operated at this time! Order issued by the High Court!

குப்பை லாரி இந்த நேரத்தில் தான் இயக்க வேண்டும் என்ற வழக்கு! உயர் நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு!

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் சென்னை மாநகராட்சியில் காலை நேரங்களில் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களும்,பணிகளுக்கு செல்வோருக்கும் சிரமம் ஏற்படுத்தும் விதமாக காலை நேரங்களில் குப்பை லாரி இயங்குகின்றது. அதனால் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும்,மாலை நான்கு மணி முதல் ஏழு மணி வரை குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மேலும் காலை நேரங்களில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகள் இயங்குவதினால் கடும் போக்குவரத்து செரிசல் ஏற்படுகின்றது என கூறப்பட்டிருந்து.குறிப்பாக வெளிநாடுகளில் இரவு நேரங்களில் மட்டும் குப்பை லாரிகள் இயங்குவதை போல சென்னையிலும் இரவு நேரங்களில் மட்டும் குப்பை லாரி இயக்கினால் எந்த ஒரு சிரமமும் ஏற்படாது என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் குப்பை லாரிகளை இந்த குறிப்பிட்ட நேரத்தில் தான் இயக்க வேண்டும் என நிர்ணயம் செய்ய முடியாது என கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Previous articleகுப்பை வண்டி இயக்க நேரம் தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!
Next articleஆன்லைன் பரிதாபங்கள்: லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு நாய் உணவை டெலிவரி செய்த அமேசான் !