புதிய ஸ்பான்சராக பிரபல நிறுவனம் தீவீரம்

Photo of author

By Parthipan K

புதிய ஸ்பான்சராக பிரபல நிறுவனம் தீவீரம்

Parthipan K

Updated on:

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது இதன் காரணமாக உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறது. மேலும் கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடைபெறாத நிலையில் தற்போதுதான் இங்கிலாந்தில் போட்டிகள் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இந்தியாவில் மே மாதம் ஐ.பி.எல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கும்.

ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. கடந்த 2 வருடமாக விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்தது ஆனால் தற்போது லடாக் எல்லை பிரச்சினையால் விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரிலிருந்து விலகியது. இதனால் புதிய ஸ்பான்சராக பதஞ்சலி நிறுவனம் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.