உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை!

Photo of author

By Parthipan K

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை!

உக்ரைன் மீது ரஷிய ராணுவம் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அச்சமடைந்த உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர். ரஷியா தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்களை கைபற்றி வருகிறது.

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் இந்த போரினால் உக்ரைன் நாட்டில் இந்தியா உள்பட பல லட்சக்கணக்கான வெளிநாட்டினர் சிக்கி கொண்டனர். எனவே உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்பட இந்திய மாணவர்களை மீட்பதற்காக மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த ‘ஆபரேஷன் கங்கா’ நடவடிக்கை மூலம் உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்கள், இந்திய மாணவர்கள் அனைவரையும் மத்திய அரசு மீட்டு இந்தியா அழைத்து வந்தது. இதையடுத்து இந்தியாவின் இந்த மீட்பு நடவடிக்கைக்கு ஒத்துழைத்த உக்ரைன் மற்றும் ரஷிய நாடுகளுக்கு மத்திய அரசு நன்றியை தெரிவித்தது.

உக்ரைனில் இருந்து மீட்டு வரப்பட்ட இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்தவர்கள் ஆவர். இந்த நிலையில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்கள் தங்கள் மருத்துவ படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களின் மருத்துவ படிப்பு தொடர்பாக மக்களவையில், காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகாய் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்து பேசிய மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இவ்வாறு கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-

உக்ரைனில் இருந்து மீட்டு வரப்பட்ட இந்திய மருத்துவ மாணவர்கள், எதிர்காலத்தில் மருத்துவராவதற்கு என்னென்ன தேவையோ, அதற்கான நடவடிக்கையை எடுப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. தற்போதைய நிலையில், அவர்கள் முதலில் அதிர்ச்சியில் இருந்து வெளியே வர வேண்டும். எனவே அந்த பணியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.