கைதியால் காவல்துறைக்கு வந்த சோதனை

Photo of author

By Parthipan K

ஆஸ்திரேலியாவில் 32 வயது ஆண் கைதுசெய்யப்படும்போது காவல்துறை வாகனத்தால் மோதப்பட்டு தலையில் உதைக்கப்பட்டதால் சுயநினைவை இழந்தார். தற்போது மெல்பர்னில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். மனநலப் பிரச்சினைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆண்  தப்பிக்க முயன்றதால் மருத்துவ ஊழியர்கள் காவல்துறையை  அழைத்தனர். காவல்துறை அதிகாரிகள் அளவுக்கு அதிகமான வன்முறையைப் பயன்படுத்தியதாக அவரின்  தந்தை கூறினார்.

அதன் தொடர்பில், தனிப்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் அவர். அவரைக் கட்டுப்படுத்த அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது. அவருக்கு ஏற்பட்ட காயங்கள் முழுமையாகப் பரிசோதிக்கப்படுவதாக அவரின் வழக்கறிஞர் கூறினார். அவர்  கைதுசெய்யப்படும் காணொளி மூலம் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாய் அவர் சொன்னார்.