இரவு 10 மணிக்கு சட்டசபைக்கு வந்த முதலமைச்சர்!!! திடீர் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு!!!

0
164
#image_title

இரவு 10 மணிக்கு சட்டசபைக்கு வந்த முதலமைச்சர்!!! திடீர் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு!!!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் இரவு 10 மணிக்கு சட்டசபைக்கு திடீரென்று வருகை தந்தார். இவரது இந்த திடீர் வருகை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி மாநில துணை சபாநாயகர் ராஜவேலு அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் துணை சபாநாயகர் ராஜவேலு அவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து துணை சபாநயகர் ராஜவேலு அவர்கள் சென்னையில் உள்ள அவருடைய மகள் வீட்டில் ஓய்வு எடுத்து வருகின்றார். இதையடுத்து புதுச்சேரி மாநில துணை சபாநாயகர் ராஜவேலு அவர்களை பார்ப்பதற்காக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் நேற்று(செப்டம்பர்22) காலை சென்னை சென்றார். இதன் காரணமாக நேற்று(செப்டம்பர்22) பகல் முழுவதும் முதல்வர் ரங்கசாமி அவர்கள் பகல் முழுவதும் சட்டசபைக்கு வரவில்லை.

வழக்கம் போல சட்டசபை அலுவலக ஊழியர்கள் நேற்று(செப்டம்பர்22) சட்டசபையில் உள்ள முதல்வர் அவர்களின் அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றனர். இதையடுத்து நேற்று(செப்டம்பர்22) இரவு 10 மணிக்கு முதல்வர் ரங்கசாமி அவர்கள் சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கு வருவதாக சட்டசபை காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விரைந்து சென்ற காவலர்கள் முதல்வர் அவர்களின் அலுவலகத்தை திறந்து வைத்தனர். பின்னர் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் இரவு 10 மணியளவில் சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அங்கு சுமார் 20 நிமிடங்கள் இருந்து சில பணிகளை மேற்கொண்டார்.

பணிகள் முடிந்ததும் முதல்வர் ரங்கசாமி அவர்கள் 10.20 மணியளவில் சட்டசபையில் இருந்து கிளம்பி சென்றார். இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி அவர்கள் திடீரென்று இரவு நேரத்தில் சட்டசபைக்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Previous articleபரவும் டெங்கு காய்ச்சல்.. மருத்துவர்களை எச்சரித்த மாநில மருத்துவத்துறை அமைச்சகம்!!
Next articleஅண்ணாமலை அவர்களின் என் மண் என் மக்கள் நடைபயணம்!!! பொள்ளாச்சியில் இன்று தொடக்கம்!!!