பரவும் டெங்கு காய்ச்சல்.. மருத்துவர்களை எச்சரித்த மாநில மருத்துவத்துறை அமைச்சகம்!!

0
68
#image_title

பரவும் டெங்கு காய்ச்சல்.. மருத்துவர்களை எச்சரித்த மாநில மருத்துவத்துறை அமைச்சகம்!!

தமிழகத்தில் வரும் அக்டோபர் 3 வாரத்தில் பருவ மழை தொடங்க இருக்க நிலையில் தற்பொழுது பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பருவ மழை தொடங்கும் முன்னதாகவே காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி விட்டது.மழை நீர் ஆகாங்கே தேங்கி டெங்கு,மலேரியா,டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட தொடங்கி விட்டது.

மழைக்காலங்களில் பரவும் முதன்மை நோயான டெங்கு வைரஸ் பாதிப்பு ஏடிஸ் எஜிப்டி கொசுக்களால் பரப்பப்படுகிறது.இந்த ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் அதிகாலை மற்றும் தாமதமான இரவில் கடிக்க கூடியது என்று சொல்லப்படும் நிலையில் இவை ஒரு முறை கடித்தலே டெங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகிறது.இதற்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளப்பட வில்லை என்றால் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளிவிடும்.

செப்டம்பர் மாத நிலவரப்படி தமிழகத்தில் 250க்கும் மேற்பட்ட நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.இந்நிலையில் டெங்கு வைரஸை பரப்பும் கொசுப் புழு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கில் வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை மூடுதல்,தேங்கிய தேவையற்ற தண்ணீரை அகற்றுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றும்,இந்த வழி முறைகளை கடைபிடிக்காமல் டெங்கு கொசுவை பரப்பும் நபர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மருத்துவ துறை இயக்குநரகம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில் தற்பொழுது டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாகி இருப்பதால் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாநில மருத்துவத்துறை அமைச்சகம் தமிழக்தில் உள்ள அனைத்து மருத்துவமனை மருத்துவர்களுக்கும் எச்சரிக்கை ஒன்றை விடுத்தது இருக்கிறது.

டெங்கு காய்ச்சல்,சிக்கன் குனியா,மலேரியா உள்ளிட்ட 25 பாதிப்புகளால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் குறித்த அனைத்து விவரங்களையும் மருத்துவர்கள் சேகரித்து அந்தந்த பகுதியில் இருக்கும் அரசு மருத்துவ அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.அதேவேளை காய்ச்சல் பாதிப்பு குறித்து விவரம் தராத மருத்துவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மற்றும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநில மருத்துவத்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது.