இன்று பிரதமர் மோடி உடன் முதலமைச்சர் ஆலோசனை! நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கப்படும்?
கடந்த மாதம் 28ம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி சென்னை வந்தார். மேலும் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சர்வதே செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். மேலும் 44வது சர்வதேச இந்தியா போட்டி தமிழகத்தில் மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து இருந்தார்.
மேலும் அதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துயிருந்தார். மேலும் இந்திய கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ரவி நேற்று முன்தினம் தேனீர் விருந்து நிகழ்ச்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்றார் மேலும் அவருடன் இணக்கமான நட்பை உறுதிப்படுத்தினார் எனவும் கூறப்படுகிறது. மேலும் அரசு அதிகாரிகளும் பங்கு பெற்றனர்.
மேலும் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோர் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்து கூறுவதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்றிரவு டெல்லி சென்றார். மேலும் இன்று காலையில் இருவரையும் தனித்தனியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிறகு மாலை 4:30 அளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேச முடிவு செய்துள்ளார்.
மேலும் அப்போது பிரதமர் மோடியிடம் தமிழகத்தில் சர்வதேச போட்டியில் நடத்துவதற்கான அனுமதி தந்ததற்கு நன்றி கூறி அதன் பிறகு தமிழ்நாட்டின் நலன் சார்ந்த திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு தருமாறு விரிவான மனு ஒன்றே அளிக்க உள்ளதாகவும் முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ஒரு 9,602 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகையை விரைந்து தருமாறும் கோரிக்கை வைக்குமாறு கூறியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என் ரவி கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதால். மசோதா மீது விரைந்து முடிவெடுத்து ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பவும் பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் பிரதமர் மோடி முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பேசப்படுகிறது. இந்த சந்திப்பு முடித்ததும் இன்று இரவு 8 மணி முதல் முக ஸ்டாலின் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.