ஜாதி பற்றி கேள்வி கேட்டதால் ஏற்பட்ட சர்ச்சை! சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்!

Photo of author

By Parthipan K

ஜாதி பற்றி கேள்வி கேட்டதால் ஏற்பட்ட சர்ச்சை! சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்!

தமிழகத்தில் தற்போது அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்போது முதுகலை வரலாறு மாணவர்களுக்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் ஒரு பாடத்தில் ஒரு கேள்வியானது இடம்பெற்றுள்ளது அந்த கேள்வியினால் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது.

மேலும் தமிழகத்தில் எந்த ஜாதி தாழ்ந்தது என்று ஒரு வினா கேட்கப்பட்டிருந்தது. இந்தகேள்விகள் மூலம் பெரும் சர்ச்சை வெடித்த  நிலையில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் வினாத்தாள்கள் வெளிகல்லூரிகளில் இருந்தும் மற்றும் வேறு பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர்கள் மூலம் தான் தயாரிக்கப்படும் என தகவல் தெரிவித்தார்.

மேலும் அவ்வாறு தயார் செய்யப்பட்ட வினாத்தாள்களை சரிபார்த்தால் மாணவர்களுக்கு அந்த தகவல் கசிந்துவிடும் என்ற காரணத்தால் முன்கூட்டியே வினாத்தாள்களை படிப்பதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த கேள்வி குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மறுதேர்வு குறித்து பரிசளிக்கப்படும் என்றும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல் தெரிவித்துள்ளார்.