ரயில் தண்டவாளத்தில் கிடந்த வாலிபரின் சடலம்! போலீசார் விசாரணை!
சேலம் மாவட்டம் கீழ்காமாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் ஸ்ரீதர்(30). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் ஸ்ரீதர் இருந்து வந்துள்ளார். மேலும் அவர் மது பழகத்திற்க்கு அடிமையாகிவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த திமிரிக்கோட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று காலை வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக தர்மபுரி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் ஸ்ரீதர் என்பது தெரியவந்தது. இது தற்கொலையா அல்லது கொலையா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.