கடனை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல் விடுத்த தம்பதி! கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!

0
255
The couple threatened to kill because they asked to repay the loan! Court action decision!
The couple threatened to kill because they asked to repay the loan! Court action decision!

கடனை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல் விடுத்த தம்பதி! கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!

கன்னியாகுமரி மாவட்டபுதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (20), இவரது மனைவி ஷீபா (48). மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் யேசுதாஸ் (69). இவர் ஒரு மீனவர். அவரிடம்  பிரான்சிஸ்  கடனாக பணம் வாங்கி உள்ளனர். பணம் கொடுத்தவர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று அடிக்கடி பணம் கேட்டு வந்தனர்.

மேலும் சம்பவத்தன்று பணம் கேட்டு பிரான்சஸ் வீட்டிற்கு சென்றவர்களை வீட்டில் இருந்த பிரான்சஸ் மற்றும் அவரது மனைவி ஷீபா கத்தி ,அறிவால் போன்ற ஆயுதங்களை காட்டி அவர்களை கொலை செய்வதாக செய்து மிரட்டியுள்ளனர். மேலும் அதனை காட்டி மிரட்டிய  காரணத்தால் அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

மேலும்  அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது பணம் வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் பணத்தை திரும்ப தராததால் குழித்துறை கோர்ட்டில் யேசுதாஸ்   வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த  மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் பிரான்சிஸ், அவரது மனைவி ஷீபா ஆகியோர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Previous articleகனல் கண்ணனை அலேக்காக தூக்கிய போலீஸ்! 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு!
Next articleமீண்டும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு! திக்குமுக்காடும் பயணிகள்!