குழந்தைகளை சுத்தியலால் அடித்த கொடூர தந்தை !! குடும்பத் தகராறில் பிஞ்சு குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை!!

குழந்தைகளை சுத்தியலால் அடித்த கொடூர தந்தை!! குடும்பத் தகராறில் பிஞ்சு குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்ப்பட்ட குடும்பத் தகராறில் ஒன்றும் தெரியாத பச்சை குழந்தைகளை கொடூர தந்தை ஒருவர் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். நெஞ்சை உறைய செய்யும் இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின்  மாண்டியா மாவட்டத்தில் உள்ள  ஸ்ரீரங்கப்பட்டணா தாலுக்காவைச் சேர்ந்த  மலகாலா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியினருக்கு ஆதித்யா வயது 4, என்ற மகனும், அமுல்யா வயது 2 என்ற மகளும் உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்ப்பட்டு வந்துள்ளது. இதில் ஸ்ரீ காந்த் மனைவியை தாக்கியுள்ளார். அதேப்போன்று நேற்று இரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கடுமையாக தொடர்ந்த வாக்குவாதம் அதிகாலை வரை தொடர்ந்த நிலையில் அடுத்த நிகழ்ந்த சம்பவம் தான் மிகவும் கொடுமையான ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரமாக இரண்டு குழந்தைகளையும் சுத்தியலால் அடித்து கொன்றுள்ளார்.

அதிகாலை நேரத்தில் தூக்க கலக்கத்தில் இருந்த குழந்தைகள் இரண்டும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தன. ஆத்திரம் அடங்காத ஸ்ரீ காந்த் லட்சுமியையும் சுத்தியலால் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். ஸ்ரீ காந்த் தப்பி ஓடி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ளவர்கள் ஸ்ரீரங்கப்பட்டணா ரூரல் போலீசாருக்கு தகவல் அளிக்கவே அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த லட்சுமியை மீட்டு மைசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இரண்டு குழந்தைகளின் உடல்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஸ்ரீ காந்தை போலீசார் தேடி வருகின்றனர்.