விவசாயிகளுக்கு வெளிவந்த குட் நியூஸ் 100%  வரை மானியம்!!  தோட்டக்கலை துறை அறிவித்த சூப்பர் அறிவிப்பு !!

0
170
Good News for Farmers Up to 100% Subsidy!! Horticulture department announced super announcement !!
Good News for Farmers Up to 100% Subsidy!! Horticulture department announced super announcement !!

விவசாயிகளுக்கு வெளிவந்த குட் நியூஸ் 100%  வரை மானியம்!!  தோட்டக்கலை துறை அறிவித்த சூப்பர் அறிவிப்பு !!

மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு தேவையான பல வசதிகளை செய்து வருகிறது. இந்நிலையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம், மூலிகை சாகுபடிக்கு மானியத் திட்டம், தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி போன்ற திட்டங்ககளை விவசாயிகளுக்கு செய்துள்ளது.

அதனையடுத்து விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன அமைக்க மானியம் வழங்கப்பட  உள்ளதாக தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது. தற்போது திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு பாசன வசதி பெறுவதற்கு மானியம்  வழங்க இருக்கிறது.

மேலும் மாவட்ட ஆட்சியர் சொட்டு நீர் பாசனம் அமைக்க தோட்டக்கலை துறை மூலம் மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதனையடுத்து அந்த மாவட்டத்திற்கு இந்த நிதியாண்டுக்கான 11.42 கோடி மானியத்தை 1400 ஏக்கர் தோட்டக்கலை சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுகுறு விவசாயிகளுக்கு 100% மானியம் மற்றும் இதர  விவசாயிகளுக்கு 75% மானியம் வளங்குள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு விவசாயிகளை தோட்டக்கலை துறை கேட்டுக்கொண்டுள்ளது.

author avatar
Jeevitha