1 வயதில் திருமணம் சிறுமிக்கு நடந்தேறிய கொடூரம்! 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிரடி சம்பவம்!

0
82
Child Marriage Case
Child Marriage Case

1 வயதில் திருமணம் சிறுமிக்கு நடந்தேறிய கொடூரம்! 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிரடி சம்பவம்!

20 ஆண்டுகளுக்கு முன்பு 1 வயதில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிக்கு ராஜஸ்தானில் உள்ள குடும்ப நீதிமன்றம் தற்போது 21 வயதில் விவாகரத்து வழங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20 வருடங்களுக்கு முன்னர் மதக் காரணங்களுக்காக 1 வயதில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிக்கு ராஜஸ்தானில் உள்ள குடும்ப நீதிமன்றம் 21 வயதில் தற்போது விவாகரத்து வழங்கியது. திருமண வாழ்க்கையை தொடங்குமாறு சிறுமியின் குடும்பத்தினர் வற்புறுத்தியதால், அவர் நீதிமன்றத்தைநாடியுள்ளார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இதுகுறித்து விசாரித்த குடும்ப நீதிமன்றத்தின் தலைமை அதிகாரி பிரதீப் குமார் மோடி, இந்த திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். தாத்தா இறந்த பிறகு, சிறுமிக்கு ஒரு வயது இருக்கும் போது அதே கிராமத்து சிறுவன் ஒருவனுடன் திருமணம்நடந்துள்ளது.

Child Marriage Case
Child Marriage Case

சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த சிறுமிக்கு முறையாக திருமணத்தை நடத்தி முடிக்க உறவினர்கள் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் செவிலியராக ஆசைப்படும் சிறுமி, தனது கனவுகளுக்கு உறவினர்கள் தடையாக இருப்பதாகக் கூறி குடும்பநல நீதிமன்றத்தை நாடியுள்ளார். அவ்வாறு திருமணத்திற்கு அந்த சிறுமி சம்மதிக்காததால் ஜாதி பஞ்சாயத்து செய்த அவரது உறவினர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் கட்டவும் உத்தரவிட்டது.

குழந்தை திருமண நடைமுறை இன்னும் ஒழிக்கப்படவில்லை என்றும், அதை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் இந்த நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அந்தப் பெண் தீர்ப்புக்கு நன்றி தெரிவித்தார். மேலும் செவிலியராக வேண்டும் என்பதே தனது கனவு என்றும், இனிவரும் காலங்களில் அதில் கவனம் செலுத்துவேன் என்றும் அந்த பெண் கூறினார். இன்று எனது பிறந்தநாள். எனக்கு தற்போது 21 வயதாகிறது. இந்த தீர்ப்பை எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பிறந்தநாள் பரிசாக பார்க்கிறேன் என்றும் அந்த சிறுமிகூறியுள்ளார்.