இறந்தவர்களுக்கு உயிரூட்டும் முயற்சி – ஆச்சரியமூட்டும் புதிய தொழில்நுட்பம் 

0
60

இறந்தவர்களுக்கு உயிரூட்டும் முயற்சி – ஆச்சரியமூட்டும் புதிய தொழில்நுட்பம்

மைஹெரிடேஜ் (MyHeritage) செயலி

மைஹெரிடேஜ் (MyHeritage) செயலி அதன் நாஸ்டால்ஜியா என்ற ஒரு புதிய கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது AI மூலம் இயக்கப்படும் தொழில்நுட்பத்துடன் பழைய புகைப்படத்திற்கு அனிமேஷன் மூலம் உயிரூட்டுகிறது.

இதன் மூலம் இறந்தவர்கள் புகைப்படத்தில் உள்ள உருவத்தை கண்சிமிட்டவைக்க, சிரிக்க வைக்க, பேசவைக்க மற்றும் பாடவைக்க முடியும் என்று கூறப்படுகிறது. மறைந்தவர்களின் புகைப்படத்தை உயிரூட்ட உதவும் இந்த செயலி மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இறந்தவர்கள் பேசுவது, சிரிப்பது போன்ற 72 மில்லியனுக்கும் அதிகமான அனிமேஷன்கள் இதன் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இணையதள லிங்க் : https://www.myheritage.com/deep-nostalgia

இந்த இணையதளத்தில் நுழைந்து உங்களிடமுள்ள இறந்த தாத்தா பாட்டி உள்ளிட்டோரின் புகைப்படங்களை பதிவேற்றினால் அதை உயிரோட்டமான வீடியோவாக மாற்றி தருகிறது. இதன் மூலமாக புகைப்படத்தில் உள்ளவர்களை உயிரோட்டமாக நேரில் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது.

இறந்தவர்களின் நினைவுகளில் வாடும் நபர்கள் இதை பார்த்தல் நெகிழ்ந்து விடுவார்கள்.அந்த அளவுக்கு இது தத்ரூபமாக மாற்றி தருகிறது.இதன் மூலமாக மறைந்தவர்கள் பலர் வீடியோ வடிவில் உலாவி வருகின்றனர்.