இயக்குனர் புதுசு, நடிகை புதுசு, இசையமைப்பாளர் புதுசு!!! புதிய கூட்டணியில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்!!!

0
43
#image_title

இயக்குனர் புதுசு, நடிகை புதுசு, இசையமைப்பாளர் புதுசு!!! புதிய கூட்டணியில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்!!!

சிவா மனசுல சக்தி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் எம்.ராஜேஸ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி அவர்கள் தற்பொழுது சைரன், ஜீனி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். மேலும் தனி ஒருவன் 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் மனிதன் திரைப்படத்தை இயக்கிய அஹமது அவர்கள் இயக்கியுள்ள இறைவன் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி தற்பொழுது நடித்து முடித்துள்ளார்.

ஏற்கனவே இயக்குநர் எம்.ராஜேஸ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி அவர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது. அதன்படி நடிகர் ஜெயம் ரவி மற்றும் இயக்குநர் எம்.ராஜேஸ் கூட்டணியில் உருவாக உள்ள திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 30வது படத்திற்கு “ப்ரதர்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரும் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் ஜெயம் ரவி நகரத்தில் இருந்து இயற்கை நிறைந்த பகுதிக்கு செல்வது போல வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ப்ரதர் திரைப்படத்தில் திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த ப்ரதர் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்பொழுது வெளியான நடிகர் ஜெயம் ரவி அவர்களின் ப்ரதர் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது.