மகளிர் உதவித் தொகைக்கு நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!! தமிழக அரசு அறிவிப்பு!!!

0
29
#image_title

மகளிர் உதவித் தொகைக்கு நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!! தமிழக அரசு அறிவிப்பு!!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்று அழைக்கப்படும் மாதம் 1000 ரூபாய் பெறுவதற்கு ஏற்கனவே விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று(செப்டம்பர்18) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

திமுக ஆட்சி ஏற்ற பிறகு பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முதல்கட்டமாக ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரையிலும் இரண்டு கட்டமாக நடைபெற்றது. மேலும் முதல் கட்ட வாக்குப்பதிவிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிலும் விண்ணப்பம் அளிக்காத பெண்களுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை முகாம் நடைபெற்றது.

இதில் 1.065 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 1.6 கோடி விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு 56 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 15ம் தேதி அதாவது அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் செலுத்தப்பட்டது. இதையடுத்து நிராகரிக்கப்பட்ட அனைவரும் மேல் முறையீடு செய்ய அதாவது மீண்டும் விண்ணப்பிக்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி நிராகரிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களின் செல்போன்களுக்கு இன்று(செப்டம்பர்18)முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும். குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் நிராகரிக்கப்பட்டவிண்ணப்பதாரர்கள் அனைவரும் இசேவை மையம் மூலமாக கோட்டாச்சியருக்கு மேல் முறையீடு செய்யலாம். அவ்வாறு மேல்முறையீடு செய்து விண்ணப்பம் செய்யும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு அளிக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நிராகரிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களும் இன்று(செப்டம்பர்18) முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன் படி மீண்டும் விண்ணப்பிக்கும் பெண்களின் மனுக்கள் அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களோடு ஒப்பிட்டு பார்க்கப்படும். பின்னர் மேல்முறையீட்டு அலுவலராக செயல்படும் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் கோட்டாட்சியர் விண்ணப்பங்களை ஆய்வு செய்வார். பின்னர் தகுதியுள்ள பெண்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.