AC அறையில் புகை போட்டதன் விளைவு! இரண்டு உயிர்களை பலி கொடுத்த குடும்பம்!

0
161
The effect of smoking in the AC room! Family who sacrificed two lives!
The effect of smoking in the AC room! Family who sacrificed two lives!

AC அறையில் புகை போட்டதன் விளைவு! இரண்டு உயிர்களை பலி கொடுத்த குடும்பம்!

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்பல், பொன்னி நகர், திருவள்ளூர் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். 60 வயதான இவர் குரோம்பட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தன்னுடைய மனைவி புஷ்பலட்சுமி 55 வயதானவர். அவர்களது மகள் மல்லிகா 38 வயதானவர்.  அவருடைய மகனான விஷால் 11 வயது ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்களது வீட்டில் கொசு தொல்லை அதிகமாக இருந்ததன் காரணமாக கொசுவை விரட்டுவதற்காக ஏசி அறையில் வீட்டினுள்ளேயே தட்டில் அடுப்பு கரியை அடுக்கி வைத்து புகை போட்டு தீ வைத்துள்ளனர்.

வீடு முழுவதும் புகை பரவியதால் கொசு தொல்லை குறைந்து அவர்கள் அனைவரும் படுக்க தயாரான நிலையில், இதை அணைக்காமலேயே விட்டுவிட்டனர். அதிலும் அவர்கள் ஏசி அறையில் இந்த புகையை வைத்துள்ளனர்.  அனைவரும் உறங்க தயாரான நிலையிலும், இந்த தீயை அணைக்காத காரணத்தினால், அந்த அறை முழுவதும் புகை பரவி உள்ளது.

கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டதன் காரணமாகவும் காற்று வெளியே செல்லாமலும்,  வெளி காற்று உள்ளே வராததன் காரணமாகவும், புகை அங்கேயே தங்கி விட்டதால், அந்த அறையில் உறங்கிய நால்வரும் மூச்சுத்திணறி படுக்கையிலேயே மயங்கி உள்ளனர். நேற்று காலை நீண்ட நேரமாகியும் சொக்கலிங்கத்தின் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த, அவரது வீட்டின் மாடியில் வாடகைக்கு வசிக்கும் சீதா என்ற பெண், அதே பகுதியில் வசிக்கும் சொக்கலிங்கத்தின் மகனுக்கு தகவல் தெரிவித்தார்.

அவர் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனது தாய், தந்தை உட்பட 4 பேரும் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அனைவரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்யும்போதே  புஷ்பலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாகவும், மற்ற மூவரையும் மேல் சிகிச்சை முடித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர்.

நேற்று இரவே புஷ்பலக்ஷ்மி இறந்து விட்ட நிலையில், தற்போது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருடைய பேரனும், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டன. மேலும் தந்தை, மகள் உட்பட இரண்டு பேருமே கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புகை போட்டதன் காரணமாக ஒரு குடும்பமே நிலை குலைந்து போனது மட்டும் இல்லாமல், இருவர் உயிரிழந்து, தந்தை மகள் இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Previous articleஐந்து வருடம் கழித்து எங்கிருந்து வந்தார் முதல் மனைவி?? கேள்விக்குறியானது நடிகை பிரியாமணியின் வாழ்க்கை!!
Next articleகம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் கடையில் ஏற்பட்ட பயங்கர விபத்து! வெடித்து சிதறிய பொருட்கள்!