இனி ஜொலிக்கவிருக்கும் எழும்பூர் அருங்காட்சியகம்!! ஆவலுடன் எதிர்பார்த்திற்கும் சுற்றுலா பயணிகள்!
1846 ஆம் ஆண்டு மதராசு கல்விக் கழகம் சென்னைக்கு ஒரு அருங்காட்சியகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து சென்னை மாகாணத்தின் பிரதானிய அரசு ஆளுநராக இருந்த சர் ஹென்றி பாட்டிங்கர் லண்டனில் இருந்து பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி குழுவிடம் அனுமதி பெற்றது.
இந்த அருங்காட்சியத்தின் முதல் பொறுப்பாளராக மருத்துவரான எட்வார்ட் பல்ஃபர் என்பவரை ஆளுநராக நியமித்தார். இந்த அருங்காட்சியத்தில் ஒரு புலிக்குட்டியும் ஒரு சிறுத்தை குட்டியும் மக்கள் பார்வைக்காக முதலில் அவ்வருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
இந்நிலையில் அருங்காட்சியகத்தில் இருக்கைகளை புதுப்பிக்க சில ஏற்பாடுகள் நடந்து கொண்டு வருகின்றது. இவ்வருங்காட்சியகம் கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் இரண்டாவது பழமையான அருங்காட்சியகமாக சிறந்து விளங்குகிறது. இவை சுமார் 16.25 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்நிலத்தில் ஆறு கலைமிகு கட்டிடங்களுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.
இங்குள்ள 46 காட்சிக்கூடங்களில் தொல்லியல், நாணயவியல், விலங்கியல்,இயற்கை அறிவியல் ,சிற்பம் ஆகிய துறைகளை சார்ந்த ஏராளமான பொருட்கள் இங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவ் அருங்காட்சியகத்தின் தரத்தை மேம்படுத்தவும் அதற்கான பணிகளை தொடர்வதற்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என சட்டசபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதை தொடர்ந்து இவ்வருங்காட்சியகத்திலுள்ள இடங்கள் மற்றும் பயணிகள் வந்து செல்வதற்காக வைக்கப்பட்டிருக்கும் இடுக்குகளை புதியதாக மாற்றி அமைக்க அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிய அறிவிப்பு ஒன்றையும் பொதுப்பணித்துறை வெளியிட்டது.