வாக்குப்பதிவு நேரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!
இந்தியா முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜுன் 1ஆம் தேதி வரை ஏழுக்கட்டங்களாக நடைபெறவுள்ளது நாடாளுமன்ற தேர்தல்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இன்று முதல் மார்ச் 27ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அரசாணையை வெளியிட்டுள்ளது.
ஏழுக்கட்டங்களாக ஏப்ரல்19ஆம் தேதி தொடங்கி ஜீன் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.
எனவே நடக்கயிறுக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எந்ததெந்த மாநிலத்தில் எந்தெந்த நேரங்களில் வாக்களிக்கலாம், எவ்வளவு நேரம் வாக்கு பதிவு நடைபெறும் என்பதற்கான அரசாணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஆணையத்தின் அரசாணையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை 7மணி முதல் மாலை 6மணி வரை வாக்குபதிவு நடைபெறும் என்றும் இந்த இடைப்பட்ட நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளது.
அதேபோல், மணிப்பூர்,மேகாலயா மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் காலை ஏழு மணிக்கு தொடங்கி மாலை நான்கு மணி வரை வாக்குபதிவு நடைபெறும், சத்தீஸ்கர், மகாரரராஷ்ரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஒரு சில தொகுதிகளில் மாலை மூன்று மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடையும் என அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.