ஒருவழியாக தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திட்டது அதிமுக கட்சி!

0
143
#image_title

ஒருவழியாக தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திட்டது அதிமுக கட்சி!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்ததை இறுதி செய்தது அதிமுக கட்சி.

வருகின்ற ஏப்ரல்19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அனைத்து கட்சிகளும் தங்களது சின்னத்தை வெளியிடுவது, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்வது, கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் பிரசார செயல்முறையை விவாதிப்பது என அனைத்து விதமான முன்னேற்பாடுகளையும் செய்து வருகின்றது.

பாஜக, திமுக உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணியை இறுதி செய்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்வது உள்ளிட்ட அடுத்தக்கட்டத்தை எட்டி வரும் நிலையில் அதிமுக கட்சி மட்டும் இன்னும் கூட்டணியை கூட இறுதி செய்யாமல் உள்ளது, பாமக உள்ளிட்ட சில கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பா.ஜ.கவுடன் கூட்டணியிட்டது.

எனவே இந்த தேர்தலில் அதிமுகவுடன் தனித்துதான் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் என அரசியல் வட்டங்கள் கருத்து தெரிவித்துனர்.

இந்த நிலையில், புதிய தமிழகம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு ஒப்பந்ததில் சற்று நேரத்தில் கையெழுத்திட்டு கூட்டணியை உறுதி செய்கிறது எடப்பாடி தலைமையிலான அதிமுக கட்சி.

மேலும் இன்று மாலை அதிமுகவின் தேர்தல் அறிக்கை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அதிமுக உடனான தேமுதிக கூட்டணி கட்சிக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Savitha