இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வந்து இழப்பை ஈடுசெய்ய வேண்டும்

0
143
ridge in Nottingham, E (AP Photo/Rui Vieira)

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

அந்த வகையில் தென்ஆப்பிரிக்கா அணி மார்ச் மாதம் இந்தியா வந்த பொது தரம்சாலாவில் நடைபெற இருந்த முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது மற்றும் 3-வது போட்டிகள் கொரோனா நோய்த்தொற்றல் கைவிடப்பட்டது.  கைவிடப்பட்ட அந்த இரண்டு போட்டிகளும் கொல்கத்தா மற்றும் லக்னோவில் நடைபெற இருந்தது. போட்டி ரத்து செய்யபட்ட காரணத்தினால் உ.பி. கிரிக்கெட் சங்கமும், பெங்கால் கிரிக்கெட் சங்கத்திற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்யும் வகையில் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வந்து 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ-க்கு பெங்கால் கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Previous articleதமிழக வீரர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு
Next articleஎட்டு வழி சாலைக்கு எதிராக விவசாயிகள் மொட்டையடித்து நூதனமான முறையில் போராட்டம்: