லாரியை சுத்தம் செய்ய போன டிரைவரின் கதி! போலீசார் விசாரணை!

0
361
the-fate-of-the-driver-who-went-to-clean-the-truck-police-investigation
the-fate-of-the-driver-who-went-to-clean-the-truck-police-investigation

லாரியை சுத்தம் செய்ய போன டிரைவரின் கதி! போலீசார் விசாரணை!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வணவாசி புதுப்பேட்டை காலனியை சேர்ந்தவர் கோபால் என்கிற சித்துராஜ் (53). இவர் கடந்த 2 வருடங்களாக பெருந்துறையில் டிப்பர் லாரி டிரைவராக பணி புரிந்து வருகிறார்
நேற்று சித்துராஜ் பெருந்துறையில் இருந்து ஈங்கூர் அருகே உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலைக்கு டிப்பர் லாரி  ஓட்டி சென்றார். அப்போது அவர் அங்கு லாரியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது  போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின் கம்பியில் டிப்பர் லாரியின் பின்பகுதியில் மோதியது .

மின்சாரம் தாக்கியதால் சித்துராஜ் தூக்கி வீசப்பட்டார். மேலும் அவர் மயக்கம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர்  சித்துராஜை மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சித்துராஜ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார் . இது குறித்து சென்னிமலை போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர் .

Previous article300 ஆண்டுகள் பழமையான சிலைகள் கண்டுபிடிப்பு! சென்னையில் பரபரப்பு!
Next article“Truecaller” வந்தாச்சு! அப்டேட்! முன்பை விட சூப்பர் அம்சங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here