300 ஆண்டுகள் பழமையான சிலைகள் கண்டுபிடிப்பு! சென்னையில் பரபரப்பு!

0
77

300 ஆண்டுகள் பழமையான அதுமட்டுமின்றி பல கோடி மதிப்பிலான சிலைகளை சென்னை காவல்துறை மீட்டு உள்ளது.

 

அது மட்டும் இன்றி 300 ஆண்டுகள் பழமையான இந்த சிலைகளை சென்னையில் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தமிழக காவல்துறை சிலை பிரிவினரால் இந்த சிலை மீட்கப்பட்டுள்ளது. இதை யார் திருடியது என்பது தெரியவில்லை. அது எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது என போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி சிலைகளை போலீசார் மீட்டு உள்ளார்கள். சென்னையைச் சேர்ந்த ஒருவர் பழங்கால சிலைகளைத் திருடிச் சென்றதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், தமிழ்நாடு சிலைப் பிரிவு காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

 

துறை அதிகாரிகள், குடியிருப்பில் சோதனையிட்டதில், இரண்டு சிலைகள், உட்கார்ந்த நிலையில் ஒரு அம்மன் சிலை மற்றும் நடனமாடும் நிலையில் ஒரு நடராஜர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

 

சிலைகளை ஆய்வு செய்த நிபுணர் ஸ்ரீதரன் கூறுகையில், ‘‘இரண்டு சிலைகளும் பழமையானவை, 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை’’ என தெரிவித்துள்ளார். கைப்பற்றப்பட்ட சிலை, சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புடையது என்றும் அவர் கூறினார்.

 

அந்த இடத்தில் இருந்த குடியிருப்பாளர், தனது பெற்றோர் தான் பிறப்பதற்கு முன்பே இருந்து சிலைகள் வைத்திருந்ததாக கூறினார். எனவே, சிலைகளின் விவரங்கள் பற்றி அவருக்கு தெரியவில்லை.

 

“சிலைகளின் தோற்றம் குறித்து ஆவணங்களைத் தருமாறு வைத்திருப்பவரிடம் கேட்டபோது, ​அவர்களிடம் எந்த விதமான ஆவணங்களும் இல்லை என்று தெரியவந்தது. சிலைகள் கோயில் பல்லக்குகளில் அவற்றைப் பொருத்துவதற்கும், பண்டிகை சமயங்களில் எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்பட்ட அடையாளங்களும் இடங்களும் உள்ளன. எனவே, அவை சந்தேகத்திற்கு இடமின்றி கோயில் சிலைகள், ”என்று சிலை பிரிவு காவலர்கள் கூறியுள்ளனர்.

எனவே, ஆகஸ்ட் 29ஆம் தேதி மாலை சட்டப்பூர்வ சாட்சிகள் முன்னிலையில் ஐடல் விங் சிஐடி சட்டவிரோத சிலைகளை கைப்பற்றியது.

 

author avatar
Kowsalya