காதலித்த மகளை ஆணவக் கொலை செய்த தந்தை!! சோகத்தில் காதலன் செய்த விபரீத காரியம்!! 

Photo of author

By Amutha

காதலித்த மகளை ஆணவக் கொலை செய்த தந்தை!! சோகத்தில் காதலன் செய்த விபரீத காரியம்!! 

Amutha

The father who murdered the daughter he loved!! Tragedy done by boyfriend in tragedy!!

காதலித்த மகளை ஆணவக் கொலை செய்த தந்தை!! சோகத்தில் காதலன் செய்த விபரீத காரியம்!! 

மகள் காதலித்ததால் அவரது தந்தையே அவரை கொலை செய்ததால் காதலன் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதி போடகுர்க்கி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி வயது 20. அதே கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதர் வயது 24. இவர் தப்பாட்டக் கலைஞர். மேலும் தின கூலியாக பணிபுரிந்து வந்துள்ளார். கீர்த்தியும், கங்காதரனும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.  இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களின் காதல் விவகாரம் கீர்த்தியின் வீட்டிற்கு தெரிய வரவே வேறு சமூகத்தைச் சேர்ந்த கங்காதர் வேண்டாம் என அவரின் வீட்டில் சொல்லியுள்ளனர். இதன் காரணமாக கீர்த்திக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே கடந்த திங்கள் அன்று வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால் எது நடந்தாலும் கங்காதரை திருமணம் செய்து கொள்வதில் கீர்த்தி உறுதியாக இருந்துள்ளார்.

இதனால் கீர்த்தியை மறுநாள் செவ்வாய்க்கிழமை அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அன்று காலை 6 மணி அளவில் நடந்துள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்ட கங்காதர் காதலியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கீர்த்தி இறந்ததிலிருந்து மிகுந்த வருத்தத்தில் இருந்த கங்காதருக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக அவரது சகோதரர் அவரை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திடீரென பைக்கை நிறுத்த சொன்ன கங்காதர் அங்கு வேகமாகச் சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கம்மாசமுத்திரா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

காதலி இருந்த துக்கத்தில் காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.