லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா!!!

0
402
#image_title

லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா!!!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் நேற்று(அக்டோபர்19) வெளியான லியோ திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.

வாரிசு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அவர்கள் லியோ திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் குமார், இசையமைப்பாளர் அனிருத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து உருவான லியோ திரைப்படம் நேற்று அதாவது அக்டோபர் 19ம் தேதி வெளியானது.

லியோ திரைப்படத்தில் நடிகை திரிஷா, நடிகை பிரியா ஆனந்த், நடிகை மடோனா செபஸ்டின், நடிகர் அர்ஜூன், நடிகர் சஞ்சய்தத், நடிகர் மேத்யூ தாமஸ், நடிகர் சாண்டி, இயக்குநர் மிஷ்கின், இயக்குநராகவும் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. பலவிதமான எதிர்ப்புகளை தாண்டியும் லியோ திரைப்படம் நேற்று(அக்டோபர்19) வெளியாகியுள்ளது. இந்நிலையில் லியோ திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

அதன்படி நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நிலையில் முதல் நாளே 120 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் வாரத்தின் இறுதிநாட்கள் சனி மற்றும் ஞாயிறு வருவதாலும், அடுத்தடுத்து சரஸ்வதி பூஜை, விஜயதசமி விடுமுறை தினங்கள் என்பதாலும் வாரத்தின் இறுதியில் மிகப் பெரிய வசூலை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous articleசெந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்க எளிமையான வழி!!! அண்ணாமலை அவர்கள் கருத்து!!!
Next articleசத்தீஸ்கர் மாநிலம் மூன்று முறை தீபாவளி கொண்டாடப் போகிறது!!! உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேட்டி!!!