பிச்சைக்காரன் பாகம் 2 ன் முதல் நான்கு நிமிடம் வெளியீடு! இதுதான் கதையா வெளிவந்த முக்கிய தகவல்!
கடந்த 2016 ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் படம் வெளியானது.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகின்றது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி வருகின்றார்.
படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் நடைபெற்றது.அப்போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது.அவரை உடனே மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு அறுவைசிகிச்சை முடிவடைந்த நிலையில் அவர் டுவிட்டர் பதிவை ஒன்றை வெளியிட்டார். அதில் உங்களால் தான் நான் நலமாக உள்ளேன் உங்களுடையே அன்பு தான் காரணம் என கூறியுள்ளார். நடிகர் மற்றும் இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி முன்பாக படத்தின் பல நிமிட காட்சிகளை பத்திரிகையாளர்களுக்காக வெளியிடுவார்.
அதனை போலவே இந்த முறையும் பிச்சைகாரன் இரண்டாம் பாகத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகளை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார். இந்த படம் மூளைமாற்று அறுவை சிகிச்சை குறித்து எடுக்கபட்டிருக்கலாம் என ட்ரைய்லரை பார்த்து கூறமுடிகிறது. மேலும் இந்த படம் தமிழ்,கன்னடம்,தெலுங்கு,மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.