தூதரக உறவை ஏற்படுத்திய  முதல் வளைகுடா நாடு?

Photo of author

By Parthipan K

தூதரக உறவை ஏற்படுத்திய  முதல் வளைகுடா நாடு?

Parthipan K

ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே தூதரக நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது. இந்த உறவின் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்திய  முதல் வளைகுடா நாடாகும். துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. தூதரக ஒப்பந்தத்தின் முதல்படியாக இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான தொலைபேசி சேவை தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் உள்ள சர்வதேச பத்திரிகையாளர்கள் லேண்ட்லைன் மற்றும் செல்போன் வழியாக ஒருவருக்கொருவரை தொடர்பு கொள்ள முடிந்ததாக தெரிவித்தனர்.