அபுதாபியில் திறக்கப்படும் முதல் இந்து கோவில்!

0
230
#image_title

அபுதாபியில் திறக்கப்படும் முதல் இந்து கோவில்!

ஐக்கிய அரபு எமிரேட்சில் முதல் இந்து கோவிலை வருகின்ற 14ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி.

மேற்காசிய நாடான அரபு எமிரேட்க்கு கடந்த 2015 ஆம் ஆண்டு சென்ற பிரதமர் அங்கு வசிக்கும் இந்து மதத்தினரின் வழிபாடிற்காக ஒரு கோயில் கூட இல்லை எனவே கோயில் கட்ட அந்நாட்டு அரசிடம் வேண்டுகொள் விடுத்தார்.

அவரது வேண்டுகொளை ஏற்ற அபுதாபி அரசு லேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரம்பா பகுதியில் 55,000 சதுர அடி நிலம் வழங்கி பிரம்மாண்டமான கோயில் கட்ட அனுமதி வழங்கியது, இதற்கான கட்டுமான பணிகளை குஜராத்தை சார்ந்த ‘பாப்ஸ்’ என்ற நிறுவனத்தினிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

கோயில் கட்டுவதற்கான பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில் வருகின்ற பிப்ரவரி 14 ஆம் தேதி அபுதாபியில் முதல் பிரம்மாண்டமான கோவிலை திறந்து வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக 13 ஆம் தேதி அபுதாபி செல்கிறார் பிரதமர் நரேந்திரமோடி.

author avatar
Savitha