நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம்!!

0
242
#image_title

நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம்!!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்க கூடிய தேர்தலும், இந்திய மக்களாட்சியில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது நாடாளுமன்ற தேர்தல்.

விரைவில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பது, தொகுதி உறுப்பினர்களை நியமிப்பது, கூட்டணி அமைப்பது என முழு வீச்சில் ஆயத்தமாகி வருகின்றன.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளே பெரும்பான்மையான வாக்கு எண்ணிக்கையில் மேலோங்கியுள்ளன, தமிழகம் திராவிட கட்சிகளின் பிடியிலேயே உள்ளன என கூறலாம், தற்போது பல்வேறு திரை பிரபலங்கள், மற்றும் பிரபலங்கள் கட்சி தொடங்கியுள்ள நிலையில் அரசியல் களத்தில் மாற்றம் நிகழுமா என இனி வரும் தேர்தலில் முடிவுகளிலே தெரியவரும்.

வரயிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளோ அல்லது பிற கட்சியோ பெரும்பான்மை பெற்று நாடாளுமன்றம் சென்றாலும் நாட்டிற்க்கும், தமிழகத்திற்கு நன்மை தர கூடிய பல திட்டங்களை வகுக்ககூடிய மற்றும் நாட்டை சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களையும் சமமேன கருதி சிறந்த முறையில் நாட்டை வழிநடத்தும் சிறந்த தலைவர்களை தேர்தெடுத்து உலகளவில் இந்தியாவை மேன்மை படுத்துவதே தமிழக மற்றும் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

author avatar
Savitha