மாற்றுத்திறனாளியை விடாமல் துரத்திய வழிப்பறி கும்பல்! சேலத்தில் திடீர் பரபரப்பு!

0
166
The gang that chased away the disabled person without letting go! Sudden commotion in Salem!
The gang that chased away the disabled person without letting go! Sudden commotion in Salem!

மாற்றுத்திறனாளியை விடாமல் துரத்திய வழிப்பறி கும்பல்! சேலத்தில் திடீர் பரபரப்பு!

இந்த தொற்று காலகட்டத்திலும் பலர் வேலை இன்றி தவித்து வந்தனர். அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகள் செய்தும் மக்களுக்கு அது போதுமானதாக இல்லை. அந்த வகையில் பார்க்கும் பொழுது மாற்றுத்திறனாளிகள் பெருமளவு சிரமத்திற்கு உள்ளானர். கை கால்கள் நன்றாக இருக்கும் மனிதர்களே தனது வாழ்வாதாரத்தை நடத்துவது பெரும் போராட்டமாக உள்ளது. அந்த வகையில் பார்க்கும் பொழுது மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.

அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. கை கால்கள் இன்றியும் தங்களால் முடிந்த வேலைகளை செய்து தங்களை தாங்களே காப்பற்றிக்கொள்ள  வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இருப்பவர்கள்தான் மாற்றுத்திறனாளிகள். அவ்வாறு இருப்பவர்களிடம் இரக்கமின்றி சில வழிப்பறி கும்பல் அவர்களை ஏமாற்றி மோசடி செய்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது சேலத்தில் ஒரு சம்பவம் இன்று அரங்கேறியுள்ளது. சேலம் பழைய பேருந்து நிலையத்தில் தனது நான்கு சக்கர வாகனம் மூலம் ஊதுபத்தி விற்று வருபவர்தான் சிவா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் தினசரி நாளை போல இன்றும் ஊதுபத்தி விற்று வந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த சில மர்ம நபர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.நீ என்ன சரக்கு அடிச்சு இருக்கியா? இல்ல சரக்கு விற்க்கிறியா

என்றெல்லாம் கேட்டுள்ளனர். அதற்கு இந்த மாற்று திறனாளி நான் ஊதுபத்தி தான் விர்க்கிறேன். மேலும் நான் என்ன செய்கிறேன் என்பதை ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று இவரும் அவர்கள் அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த மர்ம கும்பல் நாங்கள் போலீஸ் நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதில்கூற வேண்டும் என்று வாக்குவாதம் செய்து உள்ளது. மேலும் அந்த மாற்றுத்திறனாளி வைத்திருந்த பையில் உள்ள பணத்தை எடுக்க முயற்சித்துள்ளனர். அதனையடுத்து அவர் அங்குள்ள அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.அவரை பின் தொடர்ந்து அந்த மோசடி கும்பலும் வந்தது.

அங்குள்ள போலீசாரிடம் தனக்கு நடந்தவற்றை கூறி புகார் அளித்தார்.போலீசார் அந்த கும்பலை பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு கை கால் இன்றி மாற்றுத்திறனாளியாக இருப்பவர்களிடம் ஈவு இரக்கமின்றி திருட நினைக்கும் இந்த மர்ம கும்பலை கண்டு பொதுமக்கள் மிகவும் கோபம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சற்று பரபரப்பாக காணப்பட்டது.

Previous articleபாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய வெண்பா.? வெண்பாவுக்கு பதில் இவரா.?
Next articleவன்முறை சம்பவங்களால் சமூக வலைதளங்களில் 300% அதிகரித்த வெறுப்புணர்வு கருத்துக்கள்! அதிர்ச்சியில் திக்கி திணறிய பேஸ்புக்!