பெண்ணை தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்!.கவ்வி பிடித்த காவல் துறையினர்!..

0
217
The gang who carried the woman and gang-raped her!
The gang who carried the woman and gang-raped her!

 பெண்ணை தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்!.கவ்வி பிடித்த காவல் துறையினர்!..

சென்னையடுத்து போரூர் அருகே ஓடும் காரில் சென்ற பெண்ணை கத்தியை காட்டி கடத்தி சென்று கூட்டு பாலியல் செய்து நகை பறித்து சென்ற 5 பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.போரூரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன் தினம் தன பணியை முடித்து விட்டு தனது காரில்  இரவு  சென்று கொண்டிருந்தார்.

அவர் கொளுத்துவான்சேரி அருகே சென்று கொண்டிருந்த போது அவரது காரை வழி மறித்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஓட்டுனரை தாக்கி விரட்டியடித்து விட்டு உள்ளே இருந்த பெண்ணுடன் காரை கடத்திச் சென்றனர்.அந்த பெண் கதறி கூச்சலிட்டார்.இரவு நேரம் என்பதால் அந்த சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாமல் போனது.

பின்னர் அங்கிருந்த காட்டு பகுதி ஒன்றுள் காரை நிறுத்தனர்.காலி இடத்தில் அந்த பெண்ணை கத்தி முனையில் நான்கு பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம்  செய்தனர்.பின்னர்  அந்த பெண்ணிடம் இருந்த 8 சவரன் நகையை பறித்து கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடி வந்த அந்த பெண் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleசிறப்பு ரயில் சேவைகள் தொடக்கம்! இன்று காலை முதல் விண்ணப்பிக்கலாம் !
Next articleதபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்! கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா இல்லையா என்ற கேள்வி?