10 ஆம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம் செய்த 12 ஆம் வகுப்பு மாணவன்!! வினையால் வந்த குழந்தை!!

0
206
#image_title

10 ஆம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம் செய்த 12 ஆம் வகுப்பு மாணவன்!! வினையால் வந்த குழந்தை!!

விழுப்புரம் பகுதியில் 10ஆம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்த 15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது, இதனால் சிறுமியின் பெற்றோர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி நிறை மாத கர்ப்பிணியாக இருப்பதாக, இன்னும் சற்று நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.

மருத்துவர்கள் கூறிய சிறிது நேரத்தில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது, மேலும் பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்ததில் அவர்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவன் சிறுமிக்கு ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.

சிறுமியின் பெற்றோர்கள் உடனடியாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி புகார் அளித்தனர். அனைத்து மகளிர் காவல்துறையினர் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 17 வயது சிறுவனை தேடிவருகின்றனர்.

Previous articleகோயம்பேடு தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் இருந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை!
Next articleதிருமண ஆசை காட்டி போலிஸ் உள்ளிட்டவர்களிடம் பணம் சுருட்டல்! முதியவரால் மாட்டிக்கொண்ட இளம்பெண்