மகனை காதலித்து விட்டு தந்தையுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்! 

Photo of author

By CineDesk

மகனை காதலித்து விட்டு தந்தையுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்! 

CineDesk

மகனை காதலித்து விட்டு தந்தையுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்! 

உத்திரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தன் காதலனின் தந்தையுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இச்செய்தி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உத்திரபிரதேச மாநிலத்தில், கான்பூரை சேர்ந்தவர் கமலேஷ்குமார். இவர் தனது மகன் அமித்துடன் சக்கேரி பகுதியில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். அமித் அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணும் அடிக்கடி அமித்தின் வீட்டிற்கு வந்துள்ளார். நாளைடைவில் அந்த இளம் பெண்ணிற்கும் , அமித்தின் தந்தை கமலேஷ் குமாருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்ற வருடம் மார்ச் மாதம் கமலேஷ் மற்றும் அந்த இளம் பெண் இருவரையும் காணவில்லை. பெண்ணின் குடும்பத்தினர் , பெண்ணை கடத்தி விட்டதாக  சக்கேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து தீவிரமாக போலீசார் விசாரித்து வந்தனர். கடந்த ஓராண்டு காலமாக எந்த தகவலும் இல்லாத நிலையில் தற்போது இருவரையும் கடந்த செவ்வாய்கிழமை அன்று டெல்லியில் கண்டுபிடித்தது கைது செய்தனர். கமலேஷ் போலீஸ் காவலில் உள்ளார். அந்த இளம்பெண் இருவரும் காதலித்து ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும், தான் கமலேஷுடன் மட்டுமே வாழ விரும்புவதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.