தங்கை வீட்டிற்கு சென்ற பெண்! தூக்கில் தொங்கிய பரிதாபம்!

Photo of author

By Hasini

தங்கை வீட்டிற்கு சென்ற பெண்! தூக்கில் தொங்கிய பரிதாபம்!

இளம் பெண்களுக்கு எதிராக அதிகமான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எப்படி நாம் பெண்களை பாதுகாத்தாலும் அவர்களுக்கு எதிரான வன்முறைகள் எங்கேனும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. யார் மீது தவறு என்பது தெரிவதில்லை. ஆனால் பெண்கள் மீது ஆண்கள் முழு அளவில் துஷ்பிரயோகம் செய்கின்றனர்.

இதே போல் சென்னையில், மாதவரம் பகுதியில், பொன்னியம்மன் மேடு, வீரபாண்டியர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள் மஞ்சு. 20 வயதான இவர் இன்னும் திருமணம்  ஆகவில்லை. இவருடைய தங்கை சரண்யா. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது இவர் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

மனைவியை அழைத்து செல்ல கார்த்திக் வந்துள்ளார். ஆனால் சரண்யா அவர் உடன் வர மறுத்ததால் மஞ்சுவை மோட்டார் சைக்கிளில் வைத்து குளத்தூர், திருவீதி அம்மன் கோவில்  தெருவின் வழியாக தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின் சிறிது நேரத்தில் தங்கையின் கணவர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுபற்றி தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மஞ்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்துக் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டரா? என்ற கோணத்தில் கார்த்திக்கிடம் விசாரித்து வருகின்றனர்.

இந்த செய்தி அந்தபகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.