கிடுகிடுவென பனிப்பாறைகள் சரிந்தது! இதில் சிக்கிக் கொண்ட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழப்பு! மேலும் சிலபேரை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்!!
ஐரோப்பாவில் மிகவும் சிறந்த விளங்கிய மலைத்தொடரான ஆல்ப்ஸ் மலைத்தொடர்.இங்கிருக்கும் பனிப்பாறைகள் அனைத்தும் கண்ணாடி போல் காட்சியளிக்கும். மேலும் இத்தாலி,பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் இந்த மலைத்தொடர் பறந்து விரிந்து காணப்படுகிறது. சுற்றுத் தலமான இந்த மலைத்தொடரில் பனியேறுதலும் மற்றும் பனிச்சறுக்கு உள்ளிட்ட சாகசங்களில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் இத்தாலி நாட்டின் வழியாக செல்லும் இந்த மலைத்தொடர்கள் சுமார் 330 மீட்டர் உயரத்தில் மர்மலாடா என்ற பெரிய சிகரம் இருக்கிறது . புன்டா ரோக்கா என்ற பகுதி வழியாகவும் இந்த சிகரத்தை அடையலாம். இந்தப் பகுதி முழுக்க பல மக்கள் அனைவரும் மலையேற்றத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் புன்டரோக்கா பகுதிக்கு அருகில் உள்ள மலைத்தொடர்களில் பனிப்பாறைகள் சரிந்து விழுந்தது. இதனால் அங்கு சாகசத்தில் ஈடுபட்டிருந்த சிலர் அந்த மலைச்சரிவினால் திடீர்ரென்று அடித்துச் செல்லப்பட்டார்கள். இந்த விபத்தை அறிந்த மீட்பு படையினர் பல பேர் இதில் மீக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் சிக்கி ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளார்கள். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் பெல்லுனோ,ட்ரெவிசோ,டேரெண்டோ மற்றும் போல் சானோ ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மலைச்சரிவில் சிக்கி கொண்டவர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் அவ்வப்போது தகவல் தெரிவிக்கின்றார்கள்.