ஹோட்டல்குள் பாய்ந்த அரசு பேருந்து! இருவர் பலி பலர் படுகாயம்!

Photo of author

By Parthipan K

ஹோட்டல்குள் பாய்ந்த அரசு பேருந்து! இருவர் பலி பலர் படுகாயம்!

Parthipan K

The government bus ran into the hotel! Two dead and many injured!

ஹோட்டல்குள் பாய்ந்த அரசு பேருந்து! இருவர் பலி பலர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து மதுரைக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரைக்கு செல்லும் பேருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஓட்டுனர் சசிகுமார்  என்பவர் இயக்கி வந்தார். இந்நிலையில் நத்தம் கோவில்பட்டி புளிக்கடை பேருந்து நிலையத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது  கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

மேலும் பேருந்து நிலை தடுமாறி அருகில் இருந்த ஹோட்டலுக்குள் புகுந்தது. அந்த இடத்தில் விநாயகர் ஊர்வலம் காண வந்த பல்வேறு ஊர் பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர். மேலும் அவர்களின் மீதும் பேருந்து மோதியது. அதனையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த சீரகம்பட்டியை சேர்ந்த பூக்கடை வியாபாரி பாண்டி மற்றும் விநாயகர் ஊர்வலம் பார்க்க வந்தவர் என இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து ஊர்வலத்தை பார்த்துக் கொண்டிருந்த 9 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.