முதல்வருக்கு ஆளுநர் போட்ட ஆர்டர்!! உடனடியாக நிதி அமைச்சரை பதவியை விட்டு நீக்குங்க!!

0
147
The Governor put the Adar for the Chief Minister!! Remove this minister immediately!!
The Governor put the Adar for the Chief Minister!! Remove this minister immediately!!

முதல்வருக்கு ஆளுநர் போட்ட ஆர்டர்!! உடனடியாக நிதி அமைச்சரை பதவியை விட்டு நீக்குங்க!!

மத்திய அரசின் ஆதரவு கொண்ட சில ஆளுநர்கள் ஆளும் கட்சிக்கு எதிராக திசை திரும்பி உள்ளனர். கேரளா தமிழ்நாடு போன்ற சில மாவட்டங்கள் மத்திய அரசை எதிர்த்து வரும் பட்சத்தில் அங்குள்ள ஆளுநர்கள் மறைமுக பாஜகவின் நிர்வாகி போல செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கேரளா ஆளுநர் 9 பல்கலைக்கழகங்களை சேர்ந்த துணைவேந்தர்களை பதவி விட்டு ராஜினாமா செய்யும் படி உத்திரவிட்டார். ஆனால் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கவர்னர் ஆரிப் முகமது கான் உத்தரவை ஏற்கவில்லை.

இதனையடுத்து இவர்கள் பதவி ராஜினாமா குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில், துணைவேந்தர்கள் அவரவர் பதவியில் தொடரலாம் எனக் கூறி முடிவை வெளியிட்டனர். இவ்வாறு நீதிமன்றம் உத்தரவு வெளியிட்டதும், இது குறித்து கேரளா நிதி அமைச்சர் கே என் பாலகோபால் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்தார். அதில், உத்திரபிரதேசம் போன்ற பகுதிகளில் இருந்து வந்து ஆளுநராக இருக்கும் நபர்களுக்கு கேரள பல்கலைக்கழகங்களை பற்றி புரிந்து கொள்ள முடியாது என தெரிவித்தார்.

மேலும் ஆளுநர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தையும் கூறியுள்ளார். இது குறித்த உடனடியாக கவர்னர் ஆரிப்கான் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில் நிதியமைச்சர் அளித்துள்ள பேட்டி கேரளா மற்றும் இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களுக்கு இடையே பிரிவை உண்டாக்கும். அதுமட்டுமின்றி உயர்கல்வி முறையில் தவறான நோக்கத்தை உண்டாக்கும் முயற்சியாக இது உள்ளது. இவர் மட்டும் இன்றி கல்வி அமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர் ஆகியோரும் என்னை விமர்சனம் செய்தனர்.

ஆனால் அவையெல்லாம் என்னை ஏதும் பாதிக்கவில்லை. ஆனால் நிதியமைச்சர் பேசியதை ஒருபோதும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவ்வாறு  நிதியமைச்சர் கூறிய கருத்திற்கு, நான் கண்டும் காணாமல் இருந்தால், அவர் கூறியது அனைத்து கருத்துகளும் உண்மையாகிவிடும்.அது மாநிலங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் ஒரு படியாகவே அமைந்துவிடும்.

இதனை நான் கேட்காவிட்டால், எனது கடமைகளை தானே சரிவர செய்யாதது போல் ஆகிவிடும். அதனால் நிதியமைச்சர் அவ்வாறு பேசியதற்கு உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

Previous articleபோன் மோகத்தின் உச்சம்: புருஷன் பிள்ளைகளை விட போன் முக்கியமென்று மனைவி எடுத்த விபரீத முடிவு!!
Next articleபுதுமைபெண் திட்டத்தில் சேர தவறிய மாணவிகளின் கவனத்திற்கு! நவம்பர் மாதம் இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!