வெள்ளை எருக்கன் செடியின் மகத்துவம்! இவ்வாறு செய்தால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் உடனடியாக தீரும்!
வெள்ளை எருக்கன் செடியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வெள்ளையருக்கன் செடியானது தரிசு நிலங்கள், வயல் வரம்புகளில் வளரக்கூடியவை. வெள்ளை எருக்கன் செடியினால் செய்யக்கூடிய மாலையை சிவன் மற்றும் விநாயகருக்கு செலுத்தி வழிபடுவார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் ஆரோக்கியம் மற்றும் செல்வ செழிப்பு பெருகும் என்பது நம்பிக்கை.
வெள்ள எருக்கிலிருந்து கிடைக்கக்கூடிய வேர் இலை மற்றும் பால் ஆகியவை மிகுந்த மருத்துவ குணம் நிறைந்துள்ளது. வெள்ள எருக்கன் செடியிலிருந்து வரும் பாலை நமக்கு முள் குத்தி இருக்கும் இடத்தில் வைத்தால் சிறிது நேரத்திலேயே தானாக வெளி வரும். இன்றளவில் பெரும்பாலானோர் மூட்டு வலியால் பாதிப்படைந்துள்ளனர். அதற்காக வெள்ள எருக்கன் செடியில் உள்ள இலைகளை பறித்து அதனை நன்றாக கழுவ வேண்டும்.
அதன் பிறகு அந்த இலையின் முன் பின் என இரண்டு பக்கமும் விளக்கெண்ணையை தடவ வேண்டும். அதனை நெருப்பில் காண்பித்த பிறகு இலை நன்கு சூடாகும் அதன் பிறகு அந்த இலையை எந்த இடத்தில் மூட்டு வலி இருக்கின்றதோ அதில் வைத்து கட்ட வேண்டும். இவ்வாறு அரை மணி நேரம் இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். அதன் பிறகு உடலில் பித்தத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது பாத வலி பாத வெடிப்பு போன்றவை ஏற்படுகின்றது.
அவ்வாறு இருக்கும் பொழுது வெள்ளை எருக்கன் இலையை எடுத்துக் கொள்ள வேண்டும் அதனை நெருப்பில் காண்பிக்க வேண்டும் ஓரளவு சூடான பிறகு அதனை பாதத்தில் வைத்து இரவு தூங்கப் போகும் பொழுது கட்ட வேண்டும். காலை எழுந்தவுடன் அந்த வலியானது இருக்காது இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வர நல்ல பலன் ஏற்படும். அதன் பிறகு வெள்ளை எருக்கன் செடியின் வேரை எடுத்து வந்து வீட்டின் முன் பக்கம் கட்டி வைக்க வீட்டிற்கு பாம்பு போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த உயிரினங்கள் வராது.