திருமணத்தின் போது திடீரென வரதட்சணை கேட்ட மணமகன்! அடுத்து மணமகள் வீட்டார் செய்த வினோத காரியம்!! 

Photo of author

By Amutha

திருமணத்தின் போது திடீரென வரதட்சணை கேட்ட மணமகன்! அடுத்து மணமகள் வீட்டார் செய்த வினோத காரியம்!! 

திருமணத்தின் போது திடீரென வரதட்சணை கேட்ட மணமகனை நூதனமான முறையில் மணமகள் வீட்டார் தண்டனை வழங்கியுள்ளனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் பிரதாப்கரில் அமர்ஜித் வர்மா என்பவருக்கு நிச்சயம் செய்யப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு தடபுடலாக திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

திருமண விழாவின் ஒரு பகுதியாக ஜெய் மாலா என்ற மாலை மாற்றும் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திருமண விழாவிற்கு வந்திருந்த அமர்ஜித் நண்பர்கள் அங்கே தகாத முறையில் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன் மணமகள் மற்றும் மணமகன் வீட்டாரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மணமகன் அமர்ஜித் வர்மா மணமகள் வீட்டாரிடம் வரதட்சணை தருமாறு கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.

இரு வீட்டாரும் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்திய பின்பும் எந்தவித சமரசமும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் தங்களிடம் வரதட்சணை கேட்ட மணமகனை பெண் வீட்டார் சிறைபிடித்து மரத்தில் கட்டி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மந்தடா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, மரத்தில் கட்டி வைக்கப்பட்ட மணமகனை  மீட்டு வரதட்சணை கேட்ட குற்றத்திற்காக அவரைக் கைதுசெய்தனர். இந்த நிகழ்வு பற்றி போலீசார் கூறும் போது இரு தரப்பும் காவல் நிலையத்தில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், இதுவரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை என்று கூறினர்.