முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா! நீண்டநாள் கேள்விக்கு முடிவை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!!

0
168
#image_title

முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா! நீண்டநாள் கேள்விக்கு முடிவை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!

 

நம்மிடம் பல யுகங்களாக இருக்கும் இந்த “கோழியில் இருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா?” என்ற கேள்விக்கு லண்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு வழியாக விடையை கண்டுபிடித்துள்ளனர்.

 

உலக மக்கள் மத்தியில் பல ஆண்டுகளாக இல்லை பல யுகங்களாக பலவகையான கேள்விகள் விடை தெரியாமல் சுற்றி வருகின்றன. அந்த கேள்விகளுள் முக்கியமான ஒன்று கோழியில் இருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பது தான்.

 

 

இந்த கேள்வியை நாம் வாழ்க்கையில் ஒரு முறையாவது சந்தித்து இருப்போம். முதலில் முட்டைதான் வந்தது என்றால் கோழி எங்கிருந்து வந்தது என்று கேட்பார்கள் அதுவே கோழி முதலில் வந்தது என்றால் முட்டை எங்கிருந்து வந்தது என்று கேட்பார்கள். இந்த புரியாத புதிராக இருக்கும் கேள்விக்கு லண்டன் ஆராய்ச்சியாளர்கள் மூலமாக அந்த கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

 

லண்டனில் இருக்கும் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி தற்போதைய காலத்தில் இருக்கும் ஊர்வன், பரப்பன, பாலூட்டிகள் ஆகியவற்றின் மூதாதையர்கள் எல்லாம் குட்டிகளை பெற்றெடுத்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. 51 புதைபடிவ இனங்கள், 29 உயிரனங்களை பகுப்பாய்வு செய்து ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டது. குட்டிகளை ஈன்று கொண்டிருந்த சில விலங்குகள் பரிணாம வளர்ச்சியில் முட்டைகளை போடும் உயிரினங்களாக பல மில்லியன் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கக்கூடும்.

 

பல்லி இனங்கள் மற்றும் பாம்புகள் இரண்டு வகையான இனப்பெருக்க முறைகளை கையாள்கின்றது. அவை முட்டையும் இடுகின்றது. குட்டியையும் ஈன்று எடுக்கின்றது. இதனால் ஆராய்ச்சியாளர்களுக்கு சாவால் நிறைந்த ஒன்றாக இருந்தது. பெரும்பாலான இனங்கள் லைவ்பியரர்ஸ் என்ற

மீன் இனங்களை சேர்ந்தவை என்று ஆராய்ச்சிகள் கூறின. இந்த லைவ்பியரர்ஸ் வகைகள் முட்டைகளை உடலுக்குள் தக்கவைத்து குட்டிகளை ஈன்றெடுக்கும் தன்மை கொண்டவை.

 

முதலில் குட்டிகளை போட்டுக் கொண்டிருந்த கோழிகளின் மூதாதையர்கள்  பரிணாம வளர்ச்சியின் காரணமாக முட்டை போடும் கோழிகளாக மாறி இருக்கலாம். அவை இப்பொழுது முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. முதலில் மென்மையாக இருந்த முட்டை ஓடுகள் பரிணாம வளர்ச்சூ காரணமாக கடினமான ஓடுகளாக மாறியுள்ளது என்று ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.

 

ஆராய்ச்சியின் முடிவுகள் இன்னும் முழுமையாக கிடைக்கப்பெறாத நிலையில் தகவமைப்பின்படி இவ்வாறாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தற்பொழுது முட்டையில் இருந்துதான் கோழி வந்தது என்று தெரியவந்துள்ளது. முழுமையான ஆராயச்சி முடிந்த பிறகு உறுதியான விடை கிடைக்கும்.