ராகுல் காந்தியின் அவதூறு வழக்கு!! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

0
71
Rahul Gandhi's defamation case!! The Supreme Court sensational verdict!!
Rahul Gandhi's defamation case!! The Supreme Court sensational verdict!!

ராகுல் காந்தியின் அவதூறு வழக்கு!! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி” என்ற இவருடைய பேச்சால் சமூக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இவரின் எம்.பி. பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.

இவ்வாறு ராகுல் பேசியதற்காக குஜராத் முன்னாள் அமைச்சரும், பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி இவர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில் ராகுல் காந்தி குற்றவாளி என்றும், இவருக்கு இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 499 மற்றும் 500 யின் கீழ் அதிகபட்ச தண்டனையாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

எனவே இந்த வழக்கை குஜராத் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதற்கான வழக்கு விசாராணையில், “சூரத் நீதிமன்றம் வழங்கிய இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது.

அது சரியானது தான் என்று கூறி குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்பது குறிபிடத்தக்கது. இதனை அடுத்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார்.

 இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணையில் இறுதியாக சூரத் கோர்ட் வழங்கிய தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும், ஒரு ஆண்டிற்கு மேல் தண்டனை கொடுக்கப்பட்டிருந்தால் இவர் தன்னுடைய எம்.பி. பதவியை இழந்திருக்க மாட்டார். அதேப்போல இவருக்கு எதற்காக அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது?

எந்த ஒரு ஆதாரமும் இன்றி அவதூறு வழக்கை ஒழுக்க கேடாக கருதி சூரத் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் கருத்துக்களை கூறி உள்ளது.

இவர் இனி எம்.பி. யாக தொடர்வார் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் இவர் போட்டியிட அனைத்தும் செய்து தரப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

author avatar
CineDesk