மெக்சிகோவில் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருந்தத பொது பலியானவரின் நண்பர்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், அவர்கள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். அங்கு கூடி இருந்தவர்கள், இதைக்கண்டு பதறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
ஆனாலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகள் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டின் நோக்கம் என்ன என்பது உடனடியாக தெரிய வரவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.