காவேரிப்பாக்கம் அருகே தன்னுடன் குடும்பம் நடத்த மறுத்த மனைவியை முகமூடி அணிந்து பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவன், தப்பி ஓட முயற்சித்த போது அவரையும் கட்டி அனைத்து இருவரும் தீயில் கருகிய அதிர்ச்சி சம்பவம்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர் கே பேட்டையின் வங்கனூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (41). இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டை சித்ராவுக்கும் திருமானகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது.
இந்நிலையில் திருமணமான சில ஆண்டுகளில் கணவன் சித்ரா மீது சந்தேகப்பட்டு வந்துள்ளார். இந்த சந்தேகம் காரணமாக இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வந்துள்ளது. ஒரு நாள் சண்டை அதிகமான நிலையில் சித்ரா தனது இரண்டு குழந்தைகளுடன் தனது அம்மா வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளார்.
அவர் தனது அம்மா வீட்டிற்கு சென்று 3 ஆண்டுகள் ஆன நிலையில் கணவன் பாலாஜி நேற்று முன்தினம் மனைவியை தன்னுடன் வந்து மீண்டும் குடும்பம் நடத்துமாறு கேட்டுள்ளார். ஆனால் மனைவி வர மறுத்துள்ளார். இதனிடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சித்ரா சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த போது கணவன் பாலாஜி பெட்ரோலுடன் முகமூடி அணிந்து வந்துள்ளார் மறைமுகமாக மேல் பெட்ரோலை ஊற்றி உள்ளார்.
சமையல் அறையில் இருந்த காரணத்தால் தீ வெகுவாக பற்றி எரிய ஆரம்பித்தது. சித்ரா எறிந்த நிலையில் அலறினார் தப்பிக்க முயன்ற பாலாஜி யை சேர்த்து கட்டி அணைத்து கொண்டார் இதில் இருவரும் தீயில் கருகினர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகுதான் தெரியவந்தது முகமூடி அணிந்து வந்து கொல்ல முயன்றது கணவன் பாலாஜி தான் என்று. இருவரும் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.