ஆயுதப்படை போலீசார் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட சம்பவம்!..காரணம் என்ன? அதிர்ச்சியில் காவல் அதிகாரிகள்!..

Photo of author

By Parthipan K

ஆயுதப்படை போலீசார் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட சம்பவம்!..காரணம் என்ன? அதிர்ச்சியில் காவல் அதிகாரிகள்!..

Parthipan K

The incident in which the armed police shot himself!.. What is the reason? Police officers in shock!..

ஆயுதப்படை போலீசார் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட சம்பவம்!..காரணம் என்ன? அதிர்ச்சியில் காவல் அதிகாரிகள்!..

சென்னையில் நேரு உள்விளையாட்டு மைதானம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு  ஏராளமான ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டார்கள்.இந்நிலையில் ஆயுத படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சி நடத்த பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மிக கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட் விழா தொடக்கத்திலேயே மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வந்திருந்தது . இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் செந்தில்குமார் ஒருவர் திடீரென்று தான் சட்டைப்பையில்  வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்  அங்கிருந்த போலீசார்கள் அவரின் உடலை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதன் காரணம் என்ன? எதற்காக தன்னை தானே சுட்டுக் கொண்டார்? என்ற பல கோணத்தில் விசாரித்து வருகின்றனர். ஆயுதப்படை காவல் ஒருவர் தன்னையே  சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவலர் அதிகாரிகளுக்கு இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திவுள்ளது.