இந்த  மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! கட்டிடத்தின் மேலிருந்து தவறி விழுந்த தொழிலாளி!

0
157
The incident that took place in Namakkal district! The worker fell from the top of the building!
The incident that took place in Namakkal district! The worker fell from the top of the building!

இந்த  மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! கட்டிடத்தின் மேலிருந்து தவறி விழுந்த தொழிலாளி!

நாமக்கல் மாவட்டம் திண்டமங்கலம் பகுதி சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவர் கோழிப்பண்ணை அதிபர். இவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்த கட்டிடம் மேஸ்திரி பாரத்சாரதி (45). மற்றும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பார்த்தசாரதி பணி செய்யும் பொழுது கால் தவறி கீழே விழுந்து விட்டதாகவும் சக ஊழியர்கள் கூறுகின்றனர். மேலும் அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் பார்த்தசாரதியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனையில்  சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.

மேலும் அங்கு பார்த்தசாரதியை பரிசோதனை செய்த மருத்துவ குழுவினர் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் கூறினார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சக உழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஆம்னி பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கோர  விபத்து!.. பரபரக்கும் சிசிடிவி காட்சிகள்!..அதிர்ச்சியில் பொது மக்கள் !..
Next articleவங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்:!! எச்சரிக்கும் வானிலை மையம்!!