தஞ்சையில் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

0
128

தஞ்சையில் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஏன் இப்படி பண்ணிட்டீங்க” என்று மனைவி காத்தரியபடி கணவனிடம் கேட்க ,”எனக்கு வேற வழி தெரியலாம்மா” என்று உடம்பெல்லாம் தீயில் வெந்து கொண்டே அவர் சொன்ன பதில் அனைவரை இதயத்தையும் நடந்த செய்தது.இந்த கொரோனா ஊரடங்கு ஹோட்டல் ஓனர்கள் வாடகைக்கு குடியிருப்போரிடம் வாடகை பணம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது என்று தமிழக அரசும் ,கோர்ட்டும் முன்பே தெரிவித்து இருந்தது. அதே சமயம் இந்த வாடகை நம்மி  நிறைய பேர் பிழைத்து வருகின்றனர்.

இதேபோல் வீட்டுக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அந்த வீட்டை ஏலம் விடப்போவதாக வங்கி நிர்வாகம் அறிவித்ததை அடுத்து மனமுடைந்த ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து விட்டார்.

தஞ்சை அருகே உள்ள வல்லம் பகுதியில் ஆனந்த் என்பவர் மனைவியுடன் வசித்து வந்தார்.இவருக்கு 8,4 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.இவர் வெல்டர் ஆக பணிபுரிந்து வருகின்றார்.கடந்த 2015 ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்காக 9 லட்சம் கடன் வாங்கியுள்ளார். வட்டியுடன் சேர்த்து 13 லட்சம் திருப்பி செலுத்தி விட்டார். ஆனால் ,வங்கி தரப்பில் இன்னும் ஆறு லட்சம் கடன் தொகை நிலுவையில் இருப்பதாகவும் அந்த கடனை உடனே செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வந்தது .இந்த நோட்டீசை பார்த்து அலறிய ஆனந்த் வாங்கிச் சென்றார்.வங்கி மேனேஜர் அங்கிருந்த ஊழியர்களிடமும் கொஞ்சம் டைம் கொடுங்கள் எப்படியாவது கட்டுகிறேன் என்று கேட்டபோது முடியாது என்று கூறினார்.

இதனால் பட்டப்பகலில் நடுத்தெருவில் பேங்க் வாசலில் தீயில் பற்றிக்கொண்டு இறந்த நபரை பார்த்து பொதுமக்கள் அவரை காப்பாற்ற போராடினார். அதற்குள் விஷயம் அறிந்த ஆனந்தின் மனைவி ஓடிச்சென்று “ஏன் இப்படி ஒரு காரியம் பண்ணிட்டீங்க” என்று கதறி கேட்ட கேட்க,அதற்கு “எனக்கு வேற வழி தெரியலம்மா” என்று ஆனந்த உடம்பெல்லாம் நெருப்புடன் இந்த பதிலைக் கூறினார். பிறகு எல்லாரும் சேர்ந்து தீயை அணைத்து உடனடியாக தஞ்சை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சையில் அவர் அனுமதிக்கப்பட்ட தற்பொழுது வரை கவலைக்கிடமாக உள்ளார்.

இதனவ தொடர்ந்து வல்லம் பகுதியில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

28 தேதி தான் வீட்டை ஏலம் விடப் போவதாக சொல்லி வங்கி ஊழியர்கள் கடைசியாக ஒருமுறை பேசிவிட்டு வருகிறேன் என்று வீட்டில் சொல்லி விட்டுச் சென்றவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleவாழ்த்து மழையில் நனையும் பிரபலம்!
Next articleபுற்றுநோய்த் தலைநகரமாகும் சென்னை: புகையிலை மதுவை ஒழிக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்