9- வது முறையாக பட்டம் வென்ற இந்திய அணி!! குவைத்தை வென்று வெற்றி வாகை சூடியது!! 

0
131

9- வது முறையாக பட்டம் வென்ற இந்திய அணி!! குவைத்தை வென்று வெற்றி வாகை சூடியது!! 

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் 9வது முறையாக இந்திய அணி பட்டம் என்று உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஸ்ரீ கண்டிரவா மைதானத்தில் 14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி  நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரைஇறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், குவைத்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் அடைந்தது. இதையடுத்து இந்த இரு அணிகளில் வெற்றி மகுடம் யாருக்கு என நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

இந்த போட்டியில் இரு அணிகளுமே தொடக்கம் முதலே சமமான நிலையில் விளையாடி வந்தன. இதனால் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முடியாமல் தடுமாறினர். இரண்டு அணிகளிலும் வீரர்கள் விறுவிறுப்பாக ஆடியதால் போட்டி முடிவில் இரு அணிகளும் சமநிலையுடன் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையுடன் இருந்தன.

இரண்டு அணிகளும் சமநிலையில் இருந்ததால் பெனால்டி சூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதை இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட இந்திய அணியின் கோல்கீப்பர் குர்ப்ரீத் சிங் சந்து  எதிரணியை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் தடுத்து தனது அணியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்தார்.

இறுதியாக இந்திய அணி 5 – 4 என்ற புள்ளிகளுடன் குவைத்  அணியை வென்று வெற்றி வாய்ப்பை தக்க வைத்தது.  இதன் காரணமாக இந்தியா ஒன்பதாவது முறையாக தெற்காசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது.

 

Previous articleநடிகர் கமல்ஹாசன் நடிக்கும் KH233 திரைப்படம்! ரைஸ் டு ரூல் என்று போஸ்டரை வெளியிட்டு அறிவித்த படக்குழு!!
Next articleசேலம் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ரேஷன் அட்டைதாரர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!!